வழக்கமாக செப்டம்பர் மாதத்தில், ஆப்பிள் நிறுவனம் தன் புதிய ஸ்மார்ட் போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தும். அந்த வகையில், அடுத்த ஐபோன் 7, வரும் செப்டம்பர் 12 அன்று வெளியாகும் என ஒரு சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஐபோன் 6 மற்றும் 6 ப்ளஸ் சென்ற ஆண்டில், செப்டம்பர் 9 அன்று வெளியிடப்பட்டது. ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 ப்ளஸ் வெளியாகும் என்பது உறுதியானாலும், ஐபோன் ப்ரோ என்றொரு மாடல் போனையும் ஆப்பிள் வெளியிடும் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
வழக்கமான
வடிவமைப்பே, இந்த புதிய ஆப்பிள்
7 மாடல்களிலும் இருக்கும். ஆனால், 3.5 மிமீ ஆடியோ ஜாக்
நீக்கப்படும் எனத் தெரிகிறது. இருப்பினும்
இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. சிலர், அது
எடுக்கப்படாது என்றும் கூறி வருகின்றனர்.
இவற்றில்
Force Touch Home button வழங்கப்படும்
எனத் தெரிகிறது. மேம்படுத்தப்பட்ட ஆப்பிள் ஏ10 சிப்
பயன்படுத்தப்படும். 32 ஜி.பி, 128 ஜி.பி. மற்றும் 256 ஜி.பி. ஸ்டோரேஜ் உடன்
இவை வடிவமைக்கப்படும். இவற்றின் ராம் மெமரி 3 ஜி.பி. ஆக இருக்கலாம்.
இவற்றில்
12 எம்.பி. திறன் கொண்ட
டூயல் கேமரா சென்சார்கள் இயங்கும்.
0 comments:
Post a Comment