புதிய தொழில்நுட்பத்திற்காக, மொபைல் மார்கெட்டில் ஆவலுடன் அலைமோதும் வாடிக்கையாளர்களுக்கு குதூகலமூட்ட புத்தம் புதிய மொபைல்கள் வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றது.
அப்படி வரும் மொபைல்கள் ஆவலை மட்டும் அல்ல ஆச்சரியத்தையும் அளிக்கிறது. கணினியில் உள்ள எல்லாவற்றையும் கையளவு உள்ள மொபைலில் பெறமுடியும் என்றால் நிச்சயம் அது ஆச்சரியத்தை கொடுக்கத்தான் செய்யும்.
அந்த வகையில் ஹேன்காக் என்ற புதிய மொபைலை அறிமுகம் செய்துள்ளது டெல் நிறுவனம். 4 இஞ்ச் தொடுதிரையை கொண்டுள்ள இந்த மொபைல் 540 X 960 பிக்ஸல் திரை துல்லியத்தைக் வழங்குகிறது. இந்த மொபைல் மல்டி டச் மற்றும் லைட் சென்ஸார் வசதியினைக் கொண்டுள்ளது.
அதோடு இந்த மொபைல் லேட்டஸ்டு ஆன்ட்ராய்டு வெர்ஷன் ஓஎஸ் தொழில் நுட்பம் கொண்டதாகவும், ஸ்லைட் ஆப்ஷன் கொண்ட கியூவர்டி கீப்பேட் வசதியுடனும் இருக்கும் என்று வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர் பார்க்கப்படுகிறது.
எத்தைனை புதிய வசதிகள் வந்தாலும், ஒரு மொபைலில் உள்ள கேமராவை பற்றி அறிந்து கொள்வதில் மக்கள் தனி ஆர்வம் காட்டுகின்றனர். ஹான்காக் மொபைல் 8 மெகா பிக்ஸல் கேமராவினைக் கொண்டதாக இருக்கிறது.
ஒரு துல்லியமான கேமராவை எதிர் பார்த்தது போய், இப்பொழுது இரண்டு கேமராவை எதிர் பார்க்கும் மனோ நிலைக்கு அனைவரும் வந்து விட்டனர். அது போன்ற எதிர் பார்ப்பு உள்ளவர்களுக்கு ஹேன்காக் மொபைலில் எந்த ஏமாற்றமும் இல்லை. ஏனென்றால் இதில் வீடியோ சாட்டிங் வசதிக்காக இன்னொரு கேமராவும் உள்ளது.
நெட்வொர்க் வசதி எல்லா கேமராவிலும் இருக்கின்றது தான். ஆனால் எந்த அளவுக்கு வேகம் கொண்டது என்பது தான் முக்கியத்துவம் பெறுகிறது. அந்த வகையில் ஹேன்காக் ஸ்மார்ட் மொபைலில் அதி வேகமான நெட் வசதியினைப் பெற முடியும்.
பொழுதுபோக்கு வசதிக்கு மல்டிமீடியோ, தகவல் பரிமாற்றம் மற்றும் தகவல் பதிவேற்றம் செய்ய புளூடூத், யூஎஸ்பி போன்ற தொழில் நுட்பமும் இதில் உள்ளது.
0 comments:
Post a Comment