கணினி மூலம் எமது வெவ்வேறு கருமங்களை நிறைவேற்றிக்கொள்ள "மென்பொருள்" என்பது இன்றியமையாத ஒன்றாகும்.
அந்தவகையில் எமது பல்வேறு செயற்பாடுகளுக்கும் என வெவ்வேறான மென்பொருள்களை எமது கணினியில் நிறுவி பயன்படுத்துவோம் அல்லவா?
அவ்வாறான மென்பொருள்கள் அதன் பயனர்களின் தேவை விருப்பங்களுக்கு ஏற்ப
காலத்துக்கு காலம் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு மென்பொருள்கள்
மேம்படுத்தப்படும் போது அதன் முன்னைய பதிப்பில் குறைபாடுகள்
இருந்திருந்தால் புதிய பதிப்பில் அது நிவர்த்தி செய்யப்படுவதுடன் பல புதிய
வசதிகளும் சேர்க்கப்படும்.
இருப்பினும் சில சந்தர்பங்களில் குறிப்பிட்ட ஒரு மென்பொருளின் புதிய
பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ள புதிய வசதி உங்களுக்கு பயனற்றதாகவும்
சிரமமானதாகவும் அமையலாம் அல்லது குறிப்பிட்ட மென்பொருளின் புதிய பதிப்பு
உங்கள் கணினியில் சாரியாக செயற்படாமல் இருக்கலாம்.
இது போன்ற சந்தர்பங்களில் குறிப்பிட்ட மென்பொருளின் முன்னைய பதிப்பே
சிறந்தது என நீங்கள் கருதினால் உங்களுக்கு உதவுகின்றது oldversion எனும்
இணையதளம்.
இந்த தளத்தில் Ccleaner, Glary Utilities, Mozilla Firefox, Google Chrome, Nero, Photoscape, Skype, Winamp, AVG, Avast உட்பட 650 இற்கும் மேற்பட்ட மென்பொருள்கள் பட்டியல் படுத்தப்பட்டிருப்பதுடன் மொத்தமாக அவற்றின் 17,484 பதிப்புக்கள் தரப்பட்டுள்ளது.
இந்த தளத்தில் தரப்பட்டுள்ள
Search Bar மூலம் உங்களுக்குத் தேவையான மென்பொருளினை தட்டச்சு செய்வதன்
மூலம் தேடிப்பெற முடிவதுடன் இந்த தளத்தின் முகப்புப் பக்கத்தில் Utilities, Securit, Office, Networking, Multimedia, Internet, Graphics, FTP, File Sharing, Drivers, Development, Communication
என பலவேறு தலைப்புக்களின் கீழும் மென்பொருள்கள் வகைப்படுத்தப்பட்டு
தரப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்களுக்குத் தேவையான மென்பொருள்களை எளிதாகவும்
விரைவாகவும் தேடிப்பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த தளத்தில் நீங்கள் ஒரு மென்பொருளை தெரிவு செய்த பின் அதன் அடுத்த
பக்கத்தில் குறிப்பிட்ட மென்பொருளின் மிக அண்மைய பதிப்பும் அதன் ஆரம்ப
பதிப்பும் தரப்படும். மேலும் அதற்குக் கீழ் அவற்றுக்கு இடைப்பட்ட
பதிப்புக்கள் பட்டியல் படுத்தப்படுகின்றது. பின் அவற்றுள் உங்களுக்குத்
தேவையான பதிப்பை தெரிவு செய்து தரவிறக்கிக்கொள்ள முடியும்.
இந்த தளத்தில் விளம்பரமும் காட்சிப்படுத்தப்படுவதால் ஒன்றுக்கு மேற்பட்ட பல Download Button ஐ அவதானிக்க வாய்ப்புண்டு எனவே படத்தில் அம்புக்குறியால் கட்டப்பட்டிருப்பதே சரியானது என்பதை கருத்தில் கொள்ளவும்.
நீங்களும் குறிப்பிட்ட தளத்துக்கு செல்ல விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுட்டுக.
0 comments:
Post a Comment