லேப்டாப் கம்ப்யூட்டரில் ஏற்படும் வெப்பத்தை தடுக்க
கணினியில் ஏற்படும் வெப்பத்தைக் குறைக்க அதிலேயே காற்றாடிகள்
வைத்திருப்பார்கள்.. லேப்டாப்பில் ஏற்படும் வெப்பத்தை குறைக்கவும், காற்று
பரிமாற்றம் நடைபெறவும் சிறிய துளைகள் லேப்டாப் கணினியின் அடியில்
வைத்திருப்பார்கள்.
நாம் அதை மடியில் வைத்துப் பயன்படுத்துப்போது வெப்பமானது வெளியேறாத வண்ணம்
அத்துளைகள் அடைப்பட்டு விடுவதால் மிகுதியான வெப்பம் லேப்டாப்பிலேயே
தங்கிவிடுகிறது. இதனால் விரைவாக லேப்டாப் சூடேறுகிறது. இவ்வாறு சூடேறுவதால்
ஏற்படும் வெப்பத்தை குறைப்பது எப்படி, வெப்பம் அதிகளவு ஏற்படாமல்
தடுக்கும் வழிமுறைகள் என்னென்ன என்பதை இப்பதிவின் வழியே பார்ப்போம்.
Notebook laptop stand |
இத்தகை வெப்பம் அதிகரிக்கும்போது லேப்டாப்கள் தீப்பிடித்த சம்பவங்களையும்
நாம் செய்திதாள்களில் படித்திருப்போம். Dell, Sony, Acer போன்ற
நிறுவனங்களின் லேப்டாப் கணினிகளில் உள்ள பேட்டரிகள் அதிக வெப்பத்தை
வெளியிட்டதால் அவற்றுக்குப் பதிலாக மாற்று பேட்டரிகள் வழங்கப்பட்ட
சம்பவங்களும் ஏற்பட்டன.
லேப்டாப் கணினிகளில் அதிக வெப்பத்தை ஏற்படுத்தும் முதற்காரணி இந்த
பேட்டரிகள்தான்.. முதலில் இந்த பேட்டரிகள் தரமானதுதானா என சோத்தறிவது
முக்கியம். தரமற்ற பேட்டரிகளால் அதிக வெப்பம் ஏற்படும். இது தவிர கணினியில்
உள்ள எலக்ட்ரானிக் சாதனங்களாலும் வெப்பம் ஏற்படுகின்றன. இவைகளனைத்தும்
கணினி இயக்கத்தை ஆரம்பித்தவுடனேயே வெப்பத்தை வெளியிட ஆரம்பிக்கின்றன்.
அதனால் அரை மணிநேரம் தொடர்ந்து கணினியை பயன்படுத்தாத நிலையில் கணினியை
நிறுத்தி வைக்குமாறு நாளிதழ்களில் குறுந்தகவல்களாக வெளியிடுகின்றனர்.
காரணம் கணினி வெளிப்படுத்தும் வெப்பம் அதிகம்.
right position - laptop with stand |
சாதாரணமாக நம்முடைய வீட்டில் எலக்ட்ரானிக் பொருட்களை இயக்கவிட்டு, சிறிது
நேரத்தில் அதை கையால் தொடும்பொழுது இந்த வெப்பத்தை உணர முடியும். சாதாரண
Desktop computer -களில் ஏற்படும் வெப்பத்தை விட Laptop computer -களில்
ஏற்படும் வெப்பம் அதிகம். காரணம் லேப்டாப் கணினிகளில் குறைந்த இடத்தில்
அனைத்து எலக்ட்ரானிக் சாதனங்களும் வைக்கப்படுவதால்தான். இதனால் தான்
லேப்டாப் கணினிகளில் அதிகம் வெப்பம் ஏற்படுகிறது.
அடுத்து இயங்கும் வேகம் அதிகமாக இருப்பதற்காக இந்த லேப்டாப்
கம்ப்யூட்டர்களில் அதிக திறனுள்ள எலக்ட்ரானிக் பொருட்கள், விரைவாக
இயங்கக்கூடிய Operating system ஆகியவைகள் இடம்பெற்றுள்ளன. இதன் வேக
அதிகரிப்பாலும் வெப்பம் கூடுதலாக வெளியிடப்படுகிறது. இந்த வெப்பத்தை
வெளியேற்ற லேப்டாப்பினுள் வெப்பத்தை வெளியேற்றப் பயன்படும் விசிறிகள், Heat
Sink தகடுகளைப் பொருத்துகின்றனர். எனினும் இதனால் போதிய அளவு வெப்பத்தை
வெளியேற்ற முடியாத சூழ்நிலை. மேலும் இதில் பொருத்தப்படும் விசிறிகளின்
வேகம் நாளடையவில் குறைந்துவிடுகின்றன. இதனால் வெப்பம் ஏற்படுகிறது.
லேப்டாப் ஸ்டாண்ட் |
லேப்டாப்பில் ஏற்படும் அதிக வெப்பத்தை தடுக்கும் முறைகள்:
இதுபோல அதிக வெப்பத்தினால் முதலில் கணனியில் பாதிக்கப்படுவது Hardware
தான். Hardware பிரச்னை ஏற்படாமல் இருக்க முதலில் வெப்பத்தை குறைக்கவும்,
லேப்டாப்பை குளிர்விக்கவும் செய்ய வேண்டும். இதற்கு முதலில் லேப்டாப்பைத்
திறந்து அதில் பொருத்தப்பட்டிருக்கும் விசிறிகள் சரியாக இயங்குகின்றனவா என
சோதிக்க வேண்டும். அதனுடைய அதிகபட்ச வேகத்தில் விசிறிகள் சுழல வேண்டும்.
வேகம் குறைந்தாலோ அல்லது சுற்றாமல் இருந்தாலோ சரி செய்ய வேண்டும்.
Laptop fan cleaning |
புதிய லேப்டாப், அல்லது இதுவரைக்கும் திறந்து பார்க்காத லேப்டாப் (laptop)
எனில் அந்த நிறுவனங்களின் Service Center கொடுத்து சோதனை செய்ய வேண்டும்.
வீட்டிலேயே சோதனை செய்ய நீங்கள் நினைத்தால் அதற்குண்டான மென்பொருள்களைப்
பயன்படுத்த வேண்டும். கணினியில் எந்தெந்த பகுதிகள் சரியாக இயங்குகின்றன
என்பதைக் கண்டறிய மென்பொருள்கள் (Software Program) உள்ளன. அவற்றைப்
பயன்படுத்தி உங்கள் லேப்டாப்பை திறக்காமலேயே நீங்கள் சோதனை செய்துகொள்ள
முடியும்.
வெப்பம் வெளியேறுவதற்கு அமைக்கப்படிருக்கும் காற்றுத் துளைகளை அடிக்கடி
கவனிக்க வேண்டும். இதில் தூசிகள் ஏதேனும் படிந்திருக்கிறதா என்பதை சோதனை
செய்து சுத்தம் செய்ய வேண்டும். காற்றுத்துளைகளில் அடைப்பு
ஏற்பட்டிருந்தாலும் வெப்பம் வெளியேறாமல் அதிகரிக்கும்.
பயாஸ் சோதனை செய்தும் வெப்பம் உருவாவதனை அறிய முடியும். இதற்கு Bios
settings மாற்றி அமைக்க உங்கள் லேப்டாப் நிறுவனதின் இணையத்தளத்திற்கு
சென்று அவர்கள் கொடுத்திருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி Bios settings
மாற்றி அமைப்பதற்கான வழிமுறைகளைக் கொடுத்திருப்பார்கள். BIOS settings
Update களும் இணையதளத்தில் கிடைக்கும்.
BIOS Settings |
வெப்ப மிகுதியான பகுதிகளில் லேப்டாப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக ரேடியேட்டர், கார் என்ஜின், காற்றோட்டம் இல்லாத சிறிய அறைகள்,
வெட்டவெளியில் சூரிய ஒளி படும் இடங்கள் ஆகிய இடங்களில் லேப்டாப்
பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
மெத்தைகள், தலையணை, தொடைகளின் மேல் வைத்து இயக்குவது ஆகியவைகளை முற்றிலும்
தவிர்க்க வேண்டும். கால் தொடைகளின் மேல் வைத்து இயக்குவதால் உடலுக்கும்
கேடு விளைவிக்கும். மெத்தை விரிப்புகள், தலையணை போன்றவைகளின் மேல் வைத்து
இயக்குவதால் லேப்டாப்பிலிருந்து வெப்பம் வெளியேறும் வழிகளை அவைகள்
அடைத்துக்கொள்வதால் வெப்பம் அதிகமாகும்.
இதற்கு மாற்று ஏற்பாடாக இதற்காகவே தயாரிக்கப்பட்டுள்ள அலுமினிய தாங்கிகளைப்
பயன்படுத்தலாம். இத்தகைய பழக்கங்களை நாம் மேற்கொண்டால் லேப்டாப் அதிக
வெப்பம் ஏற்படாமல் தடுப்பதோடு, அவற்றில் ஏற்படும் பிரச்னைகளையும் தடுக்க
முடியும்.
0 comments:
Post a Comment